ETV Bharat / state

தாளவாடியில் புகுந்த காட்டு யானைகள் - கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு - Talavadi hilly region bordering Tamil Nadu

கர்நாடக வனப்பகுதியில் இருந்து வெளியேறி தமிழ்நாடு எல்லையான தாளவாடி மலைப் பகுதியில் உள்ள ஊருக்குள் புகுந்த 4 காட்டு யானைகளை கர்நாடக வனத்துக்குள் வனத்துறையினர் விரட்டினர்.

தாளவாடியில் புகுந்த காட்டு யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

author img

By

Published : Jan 24, 2023, 10:34 PM IST

தாளவாடியில் புகுந்த காட்டு யானைகள் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

ஈரோடு: தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்று(ஜன.24) கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய நான்கு காட்டு யானைகள் தமிழ்நாடு எல்லையான தாளவாடி மலைப்பகுதி கிராமங்களான அருள்வாடி, மெட்டல் வாடி, பீமராஜ் நகர், குருபரண்டி கிராமத்துக்குள் புகுந்து அப்பகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களில் முகாமிட்டன.

இதனால் காட்டு யானைகள் விவசாயத் தோட்டப் பகுதியில் நடமாடுவதைக் கண்ட விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி மற்றும் ஜீரஹள்ளி வனத்துறை ஊழியர்கள் விவசாய நிலங்களில் நடமாடிய காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த அப்பகுதி விவசாயிகள், கிராம மக்கள் யானைகளை வேடிக்கை பார்க்க திரண்டனர். காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததால் அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 10 மணி நேர போராட்டத்துக்குப் பின் யானைகள் கர்நாடக வனத்துக்குள் விரட்டி அடித்தனர்.

இதையும் படிங்க:VIDEO: உணவுக்காக காட்டை விட்டு குட்டியுடன் ஊருக்குள் வந்த யானைக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.