ETV Bharat / state

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம் மீண்டும் தொடக்கம்! - ஈரோட்ட்டில் மஞ்சல் ஏலம் மீண்டும் தொடக்கம்

ஈரோடு: கரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்படிருந்த மஞ்சள் ஏலம் இன்று (ஜூன். 22) மீண்டும் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம் இன்று மீண்டும் தொடக்கம்!

author img

By

Published : Jun 23, 2021, 3:56 PM IST

ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் மஞ்சள் விளைகிறது. மற்ற மாவட்டங்களில் விளைவதைவிட ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக மஞ்சள் விளைவதுடன், தரமானதாகவும் உள்ளதால், இங்குள்ள மஞ்சளுக்கு தனி விலை கிடைக்கிறது.

கரோனா இரண்டாவது அலை பொது ஊரடங்கு காரணமாக, 40 நாட்களாக மஞ்சல் ஏலம் நிறுத்தப்பட்டு, சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அரசின் அறிவுறுத்தலின்படி இன்று (ஜூன்.23) ஈரோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சள் சந்தைகளில் ஏலம் தொடங்கியது.

இதுகுறித்து, ஈரோடு மஞ்சள் மார்க்கெட் கமிட்டி செயலாளர் சாவித்திரி கூறுகையில், ’’ஈரோடு மாவட்டத்தில், கடந்த மாதம் பத்தாம் தேதி முதல் மூடப்பட் நான்கு சந்தைகளும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம் இன்று மீண்டும் தொடக்கம்!

அரசு அறிவித்துள்ள சுகாதார நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறது. கரோனா பரிசோதனை செய்த பின்னரே விவசாயிகள், வியாபாரிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இன்று நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில், குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,500 முதல் 8,500 ரூபாய் வரை ஏலம் போனது’’ என தெரிவித்தார்.

இதையிம் படிங்க: கிராமப்புறங்களில் ஆன்லைன் கல்விக்கான வசதிகள் கோரிய மனு: ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.