ETV Bharat / state

தனியார் நிதி நிறுவனம் முன்பு பெண் மகனுடன் அமர்ந்து தர்ணா! - gopichettibalaiyam

ஈரோடு : சரக்கு ஆட்டோவிற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் வாகனத்தை திருப்பி தராததை கண்டித்து இளம்பெண் குழந்தையுடன் தனியார் நிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
author img

By

Published : May 28, 2019, 11:27 PM IST

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த அக்கரைகொடிவேரியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. காய்கறி வியாபாரியான இவர், கோபிசெட்டிபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று சரக்கு ஆட்டோவை வாங்கி திருப்பூரில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒருவருடத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் கருப்புசாமி இறந்துவிட்டார். இதையடுத்து அவரது மனைவி உமாமகேஸ்வரி காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்கிடையில் அவரது மகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், கடனில் வாங்கிய ஆட்டோவிற்கு சரிவர தவனை செலுத்தமுடியாமல் போயுள்ளது. இதையறிந்த நிதி நிறுவன ஊழியர்கள் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து நிதி நிறுவனம் சார்பில் கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அபராத வட்டியை குறைத்து சுலப தவணையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின் பேரில் உமாமகேஸ்வரியும் கடன் தொகையை முழுமையாக செலுத்தியுள்ளார். ஆனால் ஆட்டோவை திருப்பி தராமல் நிதி நிறுவன ஊழியர்கள் அவரை கடந்த ஒருமாத காலமாக அலையவிட்டுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அவர் நேற்று நிதி நிறுவனம் எதிரே தனது மகனுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்ட்டார். இதையறிந்து வந்த ஊழியர்கள் உமாமகேஸ்வரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கோபிசெட்டிபாளையம்: வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் வாகனத்தை திருப்பி தர மறுத்து  நிதிநிறுவனம் முன் பெண் போராட்டம்

;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_05_28_SATHY_WOMAN_STRUGGLE_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கோபிசெட்டிபாளையம் சரவணா திரையரங்கு சாலையில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் சரக்கு ஆட்டோவிற்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை திருபித்தர மறுப்பதாகக்கூறி அக்கரை கொடிவேரி பகுதியைச்சேர்ந்த பெண்மணி உமாமகேஸ்வரி என்ற பெண்மணி குழந்தையுடன் நிதி நிறுவன வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அக்கரை கொடிவேரியை சேர்ந்த கருப்புச்சாமி என்ற காய்கறி வியாபாரி கோபிசெட்டிபாளையம் சரவணா திரையங்கு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று சரக்கு ஆட்டோ வாங்கி அதில் திருப்பூர் பகுதியில் தனது மனைவி உமாமகேஸ்வரியுடன் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கருப்புச்சாமி உயிரிழந்து விடவே இரு குழந்தைகளை காப்பாற்றும் நிலைக்கு உமாமகேஸ்வரி தள்ளப்பட்ட நிலையில் கருப்புச்சாமி வாங்கிருந்த சரக்கு ஆட்டோவில் காய்கறி வியாபாரத்தை தொடந்து நடத்திவந்துள்ளார். இந்நிலையில் தனது மகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவச்செலவில் சிக்கித்தவித்த உமாமகேஸ்வரி ஆட்டோவிற்கு வாங்கிய கடனில் மாதத்தவணை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதனால் ஓரிரு மாதங்களே நிலுவையிலிருந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் வாகனத்தை பறிமுதல் செய்துள்ளர். இந்நிலையில் நிதி நிறுவனத்தின் மூலம் கோவை நீதி மன்றத்தில் வழக்கு தொடப்பட்டு அதில் உமாமகேஸ்வரிக்கு  அபராத வட்டிகள் குறைக்கப்பட்டு மாதத்தவணை மற்றும் குறைந்த வட்டி ஆகியவைகளை செலுத்தி வாகனத்தை மீட்க நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் ரூ.20 ஆயிரம் செலுத்தி வாகனத்தை மீட்க நிதிநிறுனம் வந்த உமாமகேஸ்வரியை கடந்த ஒரு காலமாதத்திற்கும் மேலாக அலைகழித்துள்ளர். மேலும் பணத்தை செலுத்திவிட்டு செல்லுங்கள் வாகனத்தை ஒரு மாதத்திற்கு பிறகு ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த உமாமகேஸ்வரி தனது மகனுடன் நிதி நிறுவன வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் அதிர்ந்து போன நிதி நிறுவன ஊழியர்கள் உமாமஸே;வரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது வாகனத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு வாகனத்தை பெற்றுக்கொண்டு திருப்பிச்சென்றார். இதனால் கோபிசெட்டிபாளையம் சரவணா திரையரங்கு சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.