ஈரோடு: சரஸ்வதி, ஆயுத பூஜையை முன்னிட்டு சத்தியமங்கலம் பகுதியில் வாழைகள் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. சத்தியமங்கலம் வாழைத்தார் மண்டியில் சுமார் ரூ.2 ஆயிரம் வாழைத்தார்கள் விற்பனைக்குக் கொண்டு வந்தனர். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்காக வாழைப்பழங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால் பூவன் தார் ஒன்று ரூ.500 முதல் ரூ.700க்கும், தேன் வாழைத்தார் ரூ.600க்கும், செவ்வாழைத்தார் ரூ.350ல் இருந்து ரூ.500ஆகவும், நேந்திரம் தார் ரூ.40ஆகவும் விற்பனையானது. கிராமங்களில் கடை வைத்திருப்போர் வாழைத்தார்களை மொத்தமாகவும் பொதுமக்கள் சீப்பாகவும் வாங்கிச்சென்றனர்.
சத்தியமங்கலம் கூட்டுறவு சங்க விற்பனை நிலையத்திலும் வாழைத்தார் ஏலவிற்பனை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பரமத்தி வேலூர், கொடுமுடி ஆகியப்பகுதிகளில் விளையும் பூவன் ரக வாழைத்தார்களை வாங்கி வருவதாகவும், ஒரு தார் ரூ.15 கிலோ முதல் ரூ.18 கிலோ வரை எடை கிடைக்கும் என்றும், ஒருதாரில் 140 பழங்கள் முதல் 160 பழங்கள் வரை இருக்கும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள், கடந்த வாரம் ரூ.500க்கு விற்ற பூவன் ரக வாழைத்தார் இந்தவாரம் பண்டிகை என்பதால் ரூ.700க்கு விற்றது எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு