ஈரோடு: வரும் பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்றுடன் இறுதிகட்ட பிரசாரம் முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் சட்டமன்றத் தொகுதிக்குள் நுழையும் எல்லைப் பகுதியான தண்ணீர்பந்தல் பாளையம், கனி ராவுத்தர் குளம் ஆகிய இடங்களில் போலீசார் தற்காலிக முகாம் அமைத்து தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய துணை ராணுவப் படையினர் உதவியுடன் நடைபெற்ற இந்த வாகனத் தணிக்கையில் வாகனத்தின் பதிவு எண், உரிமையாளர் பெயர் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் வாகனத்தில் எடுத்துச்செல்லப்படும் பொருட்கள் தணிக்கை செய்யப்பட்டு, பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
தேர்தலுக்காக, சொந்த ஊர் நபர்களை கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.