ETV Bharat / state

மாநல அளவிலான கபாடி போட்டி: தொடங்கி வைத்த அமைச்சர் கருப்பண்ணன்!

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் வழங்கப்படும் கோப்பைக்கான மாநில அளவிலான கபாடி போட்டியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கபாடி போட்டியில் மாஸ் காட்டிய பெண்கள்
கபாடி போட்டியில் மாஸ் காட்டிய பெண்கள்
author img

By

Published : Jan 29, 2021, 1:49 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள கவுந்தப்பாடியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு புறநகர் மாவட்ட கழகம் சார்பாக 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான ஆண்கள், பெண்கள், ஆண்கள் இளையோர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது.

முதல் நாளாக நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் வந்தார். இதையடுத்து, இந்த கபாடி போட்டியில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த வீராங்கனைகளை வரவேற்றார்.

இதில், அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கோலோ இந்தியா பிரிவு கபாடி போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த யாலினியை (18) பாராட்டி சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினார். பின்பு, ஆடுகளத்திற்குப் பூஜைகள், தீபாராதனை காண்பித்த அமைச்சர் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

முதலில் விளையாடிய வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்களுடன் நின்று குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். இந்த முதலமைச்சர் கோப்பைக்கான கபாடி போட்டி ஜனவரி 29, 30, 31 பிப்ரவரி 1ஆம் தேதி வரை நான்கு நாள்கள் நடைபெறவுள்ளது.

கபாடி போட்டியில் மாஸ் காட்டிய பெண்கள்

இப்போட்டியில் முதல் பரிசாக 40 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக 25 ஆயிரம் ரூபாய், மூன்றாவது பரிசாக 10 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெறும் கபாடி அணியினருக்குத் தனித்தனி பிரிவின் கீழ் பரிசு வழங்கப்படவுள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆந்திராவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.