சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான புலிகள், சிறுத்தைகள், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.
மேலும் ஆசனூர் மற்றும் குத்தியலாதுத்தூர் வனத்துக்கு இடையே பயணிக்கும் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் முகாமிட்டு தீவனம் சாப்பிடுவது வழக்கம்.
தற்போது மழைக் காலம் என்பதால் காட்டுக்குள் கொசுக்கள் தொல்லை காரணமாக யானைகள் சாலையில் நடமாடுகின்றன.
இந்நிலையில் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே யானை கூட்டமானது சாலையில் நின்று கொண்டிருந்தன.
இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சாலையில் அணிவகுத்து ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக நின்றன. ஆனால் யானைகள் வாகனங்கள் நிற்பதை கண்டுகொள்ளாமல், ஜாலியாக சாலையில் நடமாடியது. எனவே வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சுமார் அரைமணி நேரமாக யானைகள் சாலையை விட்டு நகராமல் நின்றது. இதையடுத்து யானைகள் மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
அதன் பின்னரே வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கிருஷ்ணாபுரம் பகுதியில் புகுந்த காட்டுயானை.. வனத்திற்குள் விரட்ட முயற்சி!