ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவாச்சி என்ற இடத்தில் அமைக்கப்பட்டு வரும் அத்திக்கடவு -அவிநாசி நீரேற்று பாசனத் திட்டப்பணிகளை நேற்று மாலை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். அப்போது நீரேற்று திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன் கேட்டறிந்து, இத்திட்டம் அடுத்தாண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து, முதலமைச்சர் தனது காரில் அவ்வழியாக சென்றபோது, திடீரென காரில் இருந்து இறங்கி சாலையோரம் நின்ற மக்களிடம் நலம் விசாரித்தார். அப்போது, முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுங்கள். முகக்கவசம் இல்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
பேசிவிட்டு காரில் ஏற சென்றபோது, அங்கிருந்த குழந்தைகள் முதலமைச்சரை பார்த்து அண்ணா என்று அழைத்ததும் சிரித்த முகத்துடன் திரும்பி பார்த்தவர், அங்கிருந்த குழந்தைகளிடம் என்ன படிக்கிறீர்கள் என கேட்டார்.
அதற்கு குழந்தைகளும் பதில் சொல்வதை கேட்டு முதலமைச்சரும் மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்றார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவம்: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு திமுக ரூ.25 லட்சம் நிதியுதவி