ETV Bharat / state

ஊருக்குள் புகுந்த குட்டி யானையை காட்டுக்குள் சேர்த்த வனத்துறை !

ஈரோடு: கடம்பூர் அருகே பசவளக்குட்டை வனத்தில் இருந்து வழி தவறி ஊருக்குள் புகுந்த குட்டி யானையை மீட்டு காட்டுக்குள் வனத்துறையினர் சேர்த்தனர்

The baby elephant was added to his mother
author img

By

Published : Sep 27, 2019, 6:42 PM IST

Updated : Oct 7, 2019, 10:33 PM IST

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியை ஒட்டி பவளக்குட்டை கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள இக்கிராமத்திற்குள் வன விலங்குகள் அவ்வப்போது புகுந்துவிடுவது வழக்கம். அதுபோல, நேற்றைய தினம் வனத்திலிருந்து வழிதவறி வந்த ஆண் யானைக்குட்டி அப்பகுதியில் இருந்த மக்காச்சோளம் காட்டிற்குள் புகுந்தது.

இதனைப்பார்த்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் குட்டியானையை மீட்டு அதற்கு திரவ உணவுப்பொருள்களை வழங்கினர்.

ஊருக்குள் புகுந்த குட்டியானை

அதனைத்தொடர்ந்து குட்டி யானையை மெல்ல மெல்ல துரத்தி வனப்பகுதிக்குள் விரட்டினர் வனத்துறையினர்.

இதையும் படிங்க: யானைகளுக்கிடையே மோதல்... உயிரிழந்த ஆண் யானை!

Intro:Body:tn_erd_01_sathy_elephant_rescue_vis_tn10009

கடம்பூர் அருகே வழிதவறி ஊருககுள் புகுந்த குட்டியானையை மீட்டு மீண்டும் தாயிடம் சேர்த்த வனத்துறை

கடம்பூர் அருகே பசவளக்குட்டை வனத்தில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்த குட்டியானையை மீ்ட்டு மீண்டும் தாயிடம் வனத்துறையினர் சேர்த்தனர்.

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியை ஒட்டி பவளக்குட்டை கிராமம் உள்ளது. வனத்தையொட்டி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். வனத்தில் இருந்து வரும் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதம்செய்து வந்தன. இந்நிலையில், வனத்தில் இருந்து வழிதவறி வந்த 2 மாத ஆண்குட்டியானை பவளக்குட்டை முருகன்கரடு மக்காச்சோளம் காட்டில் சுற்றி திரிந்தது. இதை பார்த்த கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர் குட்டியை மீட்டு அதற்கு திரவப்பொருள்களை வழங்கினர். வெயில் அதிகமாக இருந்ததால் குட்டிக்கு தண்ணீர்ஊற்றி வெப்பத்தை தணித்தனர்.அதனைத் தொடர்ந்து குட்டியை மெல்ல மெல்ல துரத்தியபடி காட்டில் இருந்து வனப்பகுதி வரை துரத்தினர். அங்கிருந்து வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். தாய்யானை கூட்டத்தில் குட்டி சேர்த்து விடுவதற்கு வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு குட்டியானை காட்டுக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Conclusion:
Last Updated : Oct 7, 2019, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.