ETV Bharat / state

ஆபத்தை உணர்க: முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறும் பயணிகள்! - erode extra bus

கர்நாடக வழியாகப் பேருந்துகள் செல்ல தடையிருப்பதால் தாளவாடிக்கு கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

thalavadi people request for extra bus
thalavadi people request for extra bus
author img

By

Published : Jul 20, 2021, 6:53 PM IST

ஈரோடு: தமிழ்நாடு-கர்நாடக மாநில எல்லையில் உள்ள தாளவாடியில் 75 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் அரசு நலத்திட்ட உதவிகள் உள்பட அனைத்துத் தேவைகளுக்கும் சத்தியமங்கலம், ஈரோடு, கோவை ஆகிய நகரங்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணிக்கின்றனர்.

நாள்தோறும் எட்டு பேருந்துகளில் ஆயிரக்கணக்கானோர் பயணித்துவந்த நிலையில் தற்போது தளர்வுடகளுடன்கூடிய ஊரடங்கு காரணமாக ஐந்து பேருந்துகளே இயக்கப்படுகின்றன.

முண்டியடிக்கும் பயணிகள்

இதில் 52 பேர் மட்டுமே பயணிக்க முடியும். குறைந்த அளவிலான பேருந்து காரணமாக 70-க்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு ஏறுகின்றனர். இதனால், தகுந்த இடைவெளியின்றி பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தொற்று பரவுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.

முண்டியடித்துக் கொண்டு ஏறும் பயணிகள்

கர்நாடக எல்லையான புளிஞ்சூர் வழியாகச் செல்ல தடையிருப்பதால் அடர்ந்த காட்டுப்பாதையான தலமலை வழியாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக இருசக்கர வாகனத்தில் செல்ல முடியாததால் தாளவாடியில் மேலும் ஐந்து பேருந்துகள் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற வீட்டுவசதி வாரிய அலுவலர் வீட்டில் 45 பவுன் நகை கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.