ETV Bharat / state

கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு - ஈரோடு

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்திலிருந்த தாலிக்கொடி திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Temple lock and jewelry theft
author img

By

Published : Nov 19, 2019, 10:21 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள துண்டன் சாலை கிராமத்தில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வழக்கம்போல் பூட்டிவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இன்று கோயிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் சிலையின் கழுத்திலிருந்த அரை பவுன் தாலிக்கொடி, கோயிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவை திருடுபோயிருந்தது தெரியவந்தது.

கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

இது குறித்து கிராம மக்கள் பவானிசாகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இப்பகுதியில் தொடர்ச்சியாக கோயிலை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளதால் உடனடியாக கோயிலில் கொள்ளையடிப்பவர்களைக் கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

இதையும் படிங்க:

சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற ஜடேருத்ரசாமி தேர்த்திருவிழா!

Intro:Body:tn_erd_02_sathy_kovil_theft_vis_tn10009

சத்தியமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலிக்கொடி திருட்டு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள துண்டன் சாலை கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று இரவு கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றனர். இந்நிலையில் இன்று கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது அம்மன் சிலையின் கழுத்திலிருந்த அரை பவுன் தாலிக்கொடி மற்றும் கோயிலின் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியல் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கிராமமக்கள் பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பவானிசாகர் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இப்பகுதியில் தொடர்ச்சியாக கோயிலை குறிவைத்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளதால் உடனடியாக கோவிலில் தகொள்ளையடிப்பவர்களை கண்டுபிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.