ஈரோடு கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காளிபாளையம், பெரியகொடிவேரி பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு கவசம் உபகரணங்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிக்காக மூன்று டேங்கர் லாரிகள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதில் ஒரு லாரியில் மஞ்சள் நீரும் ஒரு லாரியில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணியும் நடைபெற்றுவருகிறது” எனக் கூறினார்.
மேலும், “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் யூடியூப், கல்வி தொலைக்காட்சிகள் மூலமாக பேராசியர்களை கொண்டு பாடம் நடத்தப்பட்டுவருகிறது. அதனை மாணவர்கள் பார்த்து பாடங்களை கற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” எனவும் கூறினார்.
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் இருவருக்கு கரோனா பாதிப்பு: எண்ணிக்கை 40ஆக உயர்வு!