ஈரோடு: பெருந்துறை அடுத்துள்ள முள்ளம்பட்டி பஞ்சாயத்து தலைவராக சிவகாமி என்பவர் இருந்து வருகிறார். இவரது கணவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். இந்நிலையில், முள்ளம்பட்டி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. இவர் முடி திருத்தும் பணி செய்து வருவதுடன் டேங்க் ஆப்ரேட்டராகவும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாத காலமாக டேங்க் ஆப்ரேட்டருக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என கருப்பணசாமி தெரிவித்து உள்ளார்,. இது குறித்து கருப்பண்ணசாமியின் மகன் சக்திவேல் பஞ்சாயத்து கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கிடையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விசாரித்த போது மூன்று மாதத்திற்கு ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் பஞ்சாயத்து நிதியிலிருந்து டேங்க் ஆப்ரேட்டர் ஊதியம் மற்றும் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக எடுக்கப்பட்டதாக தெரிய வந்து உள்ளது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பியதால் கருப்பண்ணசாமி மற்றும் அவரது மகன் செய்யும் தொழில்களை நடத்த விடாமல் பஞ்சாயத்து தலைவரின் கனவர் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது. மேலும், சாதிய பாகுபாடு ரீதியிலும் மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கருப்பண்ணசாமி தற்கொலைக்கு முயன்று தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஸ்பைடர் மேன் போல் மாடிக்கு மாடி தாவிய கொள்ளையன்.. ஜோஸ் ஆலுக்காஸ் வழக்கில் கோவை துணை ஆணையர் சந்தீஸ் அளித்த பிரேத்யேக தகவல்!