கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 18 பேர் குடும்பத்துடன் கட்டுமான பணிக்குச் சென்றிருந்தனர். சேலம் அடுத்த ஏற்காட்டைச் சேர்ந்த 18 பேரும் தேசிய ஊரடங்கு காரணமாக குடகில் சிக்கிக்கொண்டனர்.
இது குறித்து, அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு கர்நாடகத்தில் சிக்கிக்கொண்ட தமிழர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதையடுத்து கர்நாடக மாநில அரசுக்கு மாவட்ட ஆட்சியர் உதவி கோரி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், கர்நாடக மாநில பேருந்து மூலம் தாளவாடி அடுத்த ஆசனூர் அருகே உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து தாளவாடி வருவாய் துறையினர், 18 தமிழர்களுக்கும் உணவு உள்ளிட்டவற்றை வழங்கி இரண்டு வாகனங்கள் மூலம் பண்ணாரி சோதனைச்சாவடியில் மருத்துவ பிரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவ பரிசோதனை செய்து, பின்னர் அனைவரும் சொந்த ஊரான ஏற்காட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.