ETV Bharat / state

"அவரே எங்களுக்கு தான் ஓட்டு போடுவார்" - செல்லூர் ராஜூ - அமைச்சர் பொன்முடி கலகலப்பு! - ஈரோடு தேர்தல் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் பொன்முடியும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தங்கள் கட்சிகளுக்குக்காக ஒரே வீட்டில் வாக்கு சேகரித்த சுவாரசிய நிகழ்வு நடைபெற்றது.

செல்லூர் ராஜூ - அமைச்சர் பொன்முடி
செல்லூர் ராஜூ - அமைச்சர் பொன்முடி
author img

By

Published : Feb 24, 2023, 10:10 AM IST

பிரசாரத்தின் போது செல்லூர் ராஜூ - அமைச்சர் பொன்முடி கலகலப்பு!

ஈரோடு: கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் தங்கள் கட்சி வேட்பாளருக்காக ஒரே வீட்டில் வாக்கு சேகரித்த சுவாரசிய சம்பவம் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் 27ஆம் தேதி நடைபெறுவதை ஒட்டி அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக உச்சகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் போடியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கள்ளுக்கடை மேடு, கல்யாணசுந்தரம் வீதியில் வாக்கு சேகரித்துவிட்டு தன் காரில் சென்று கொண்டு இருதார். மறுபுறம் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

அதே பகுதியில் காரில் சென்ற அமைச்சர் பொன்முடி, ஒரு வீட்டில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் வாக்கு சேகரிப்பதை கண்டார். உடனடியாக காரை நிறுத்திய அமைச்சர் பொன்முடி அதே வீட்டுக்கு தானும் சென்று காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கத் தொடங்கினார்.

மேலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை நோக்கி, "இவரே எங்களுக்கு தான் ஓட்டு போடுவார், அதனால் அனைவரும் கை சின்னத்திற்கு வாக்கு அளித்து விடுங்கள்" என்று அமைச்சர் பொன்முடி கூறினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரத்திற்கு அதிமுக - திமுக தொண்டர்களிடையே சிரிப்பலை வீசியது.

முன்னதாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் பொன்முடி, அதே பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டார். சாப்பிடும் போது அமைச்சர் பொன்முடி, "தினமும் காலையில் ஒரேயொரு முட்டை தோசை மட்டும் தான் சாப்பிடுவேன், இங்கு தோசை நன்றாக உள்ளது" என்று கூறி மேலும் ஒரு தோசை வாங்கி சாப்பிட்டார்.

இதையும் படிங்க: Punctuality முக்கியம் பிகிலு! 10 நிமிட தாமதத்தால் 1,000 கி.மீ திருப்பி அனுப்பப்பட்ட விமானம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.