ETV Bharat / state

தமிழ்நாடு-கர்நாடகா இடையே பேருந்து சேவை தொடங்கியது

author img

By

Published : Nov 12, 2020, 11:00 PM IST

ஈரோடு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியதை அடுத்து, ஈரோட்டில் இருந்து புறப்பட்ட பேருந்து கர்நாடகா மாநிலம் மைசூருக்கு சென்றடைந்தது.

தமிழ்நாடு-கர்நாடகா இடையே பேருந்து சேவை தொடங்கியது
தமிழ்நாடு-கர்நாடகா இடையே பேருந்து சேவை தொடங்கியது

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 23ஆம் தேதி முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள பயணிகள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பவதற்கு வசதியாக, இரு மாநிலங்கள் இடையே நேற்று (நவம்பர் 11) முதல் பேருந்து சேவை தொடங்கியது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து திம்பம் வழியாக மைசூருக்கு 2 தமிழ்நாடு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதே போல, கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து கோவைக்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டது. இதில் முகக் கசவம் அணிந்தவாறு பயணிகள் பயணித்தனர். இரு மாநிலங்களிடையே அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சியைடந்தனர்.

இதையும் படிங்க:

தீபாவளிக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மலர் அலங்கார தோரணங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.