ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் காவல் நிலைய உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தவர் ஹபியுல்லா (55). இவர் திங்கள்கிழமை பவானிசாகர் அணைப்பூங்கா சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை உடனடியாக சத்தியமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பணியின்போது உயிரிழந்த ஹபியுல்லா உடலுக்கு காவல் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.