ஈரோடு: சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயின் ஃப்ளோரா. இவர் பவானிசாகரில் உள்ள அரசினர் மருந்தகத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ஜெயின் ஃப்ளோராவுக்கு பிரியதர்ஷினி மற்றும் ப்ரீத்தி என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் பிரீத்தி உக்ரைன் நாட்டில் உள்ள உஸ்குரோத் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு கிடையே போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில், உஸ்குரோத் பகுதியில் இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை என கூறப்படுகிறது. மேலும், தற்போது மாணவி பிரீத்தி உட்பட இந்தியர்களை ஒரு பேருந்தில் ஹங்கேரி எல்லை நோக்கி அழைத்துச் செல்வதாகவும் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கிய மாணவி - வீடியோ காலில் ஆறுதல் கூறிய மயிலாடுதுறை ஆட்சியர்