ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலுள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழைபெய்ய வேண்டி முதலாவதாக கணபதி ஹோமத்துடன் யாக பூஜை தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோயில் வளாகத்தில் யாக குண்டம் வளர்க்கப்பட்டு வேத விற்பன்னர்கள் வேதம் ஓதி மழைபெய்ய வேண்டி பூஜை செய்தனர். பின்னர் பக்தர்கள், பொதுமக்கள் வருணபகவான் சுவாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பண்ணாரிஅம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை நடத்தினர்.