ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பிய ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அப்பகுதி முழுவதையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் மண்டல சிறப்பு அலுவலர் வெங்கடேஷ், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் பாதுகாப்பு குறித்தும், சுகாதாரத் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் அவர் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், அவர்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறதா, உணவு பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது போன்றவை குறித்து மாவட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது அப்பகுதியில் உள்ள சிலர் அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் அத்தியாவசியப்பொருட்கள் வாங்க போதவில்லை என்றும்; ரேஷன் கடைகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சிறப்பு அலுவலரிடம் புகார் தெரிவித்தனர்.
மக்களின் குறைகளை கேட்டறிந்த சிறப்பு அலுவலர், இப்பிரச்னை குறித்து அரசிடம் தான் தெரிவிப்பதாக மக்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: சொன்னது போலவே உதவிய மாவட்ட நிர்வாகம்’ - நன்றி நவிழும் பழங்குடியினர்!