ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக மான் வேட்டையில் ஈடுபடுவதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர், புதர் மறைவில் பதுங்கிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
இதையடுத்து, பிடிபட்டவர்களிடமிருந்த புள்ளி மான் தலையை கைபற்றிய வனத்துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கரோனா ஊரடங்கின் காரணமாக நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மானை வேட்டையாடி உண்டதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து திகினாரைச் சேர்ந்த பசுவன்னா, குட்டீஸ்வரன், நஞ்சன், சுப்பிரமணி, மாரன், வேலுச்சாமி ஆகிய ஆறு பேரை கைது செய்த வனத்துறையினர், அவர்களை ஆசனூர் புலிகள் காப்பகம் இணை இயக்குநர் கேவி நாயுடு முன் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த இயக்குநர், மான் வேட்டையில் ஈடுபட்ட ஆறு பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:36 வயது பெண் பாலியல் வன்புணர்வு: மூன்று பேர் கைது!