ETV Bharat / state

யானைகளைத் தடுக்க சுருள் கம்பி மின்வேலி - Elephant death by electrocution

ஈரோடு: தாளவாடிப் பகுதிகளில் விவசாய தோட்டங்களில் நுழையும் காட்டுயானைகளை தடுக்க அவைகளின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சுருள் கம்பி மின்வேலிகளை அப்பகுதி விவசாயிகள் அமைத்துவருகின்றனர்.

சுருள் கம்பி மின்வேலி
சுருள் கம்பி மின்வேலி
author img

By

Published : May 15, 2020, 2:49 PM IST

ஈரோடு மாவட்டம் தாளவாடியைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் யானைகள், சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவைகள் அடிக்கடி உணவு தேடி ஊருக்குள் புகுந்துவருகின்றன. அதில் யானைகள் விவசாயத் தோட்டங்களில் புகுந்த பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. அதன் காரணமாக அவர்கள் தோட்டங்களைச் சுற்றி மின்சார வேலி அமைத்து வந்தனர்.

அந்த மின்சார வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துவருவதால், அதனை தவிர்க்கும் விதமாக அப்பகுதி விவசாயிகள் சுருள் கம்பி மின்வேலிகளை அமைத்துவருகின்றனர். அதில் அவர்கள், உயர மின்வேலி கம்பங்களில் சுருள் கம்பிகளை தொங்கவிடுகின்றனர்.

சுருள் கம்பி மின்வேலி

அதனால் அதில் சிக்கும் யானைகள் மீது மின்சாரம் தாக்கும் ஆனால் அவைகள் உயிரிழக்காது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவர்கள் இந்த சுருள் கம்பி மின்வேலி அமைக்க ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் செலவாகிறது எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்களை துரத்தும் யானைகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.