ஈரோடு லக்காபுரம் முத்துகவுண்டன்பாளையம், நடராஜன் மகன் செல்வகுமார். இவர் கனக்கன் தோட்டத்தில் மூன்று வெள்ளாடுகளை வளர்த்து வந்தார். இரவில் கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆடுகளை, காலையில் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட சென்றிருக்கிறார். ஆனால், ஆடுகளைக் காணவில்லை.
அவற்றை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அப்பகுதியிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், இரண்டு வெள்ளாடுகளை பிடித்துச் சென்றதாகத் தெரிவித்தனர். காணாமல் போன இரண்டு ஆடுகளை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
உடனடியாக, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மொடக்குறிச்சி பகுதியிலுள்ள சின்னியம்பாளையம் முருகானந்தம், புதுார் சந்தோஷ் குமார், புதுலவசு சங்கர், முத்துகவுண்டன்பாளையம் வெற்றிவேல் ஆகிய நால்வரும் ஆடுகளை திருடியது தெரியவந்தது. தொடர்ச்சியாக, இவர்கள் அப்பகுதியில் ஆடுகள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, நால்வரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம்: வாழ்க்கையை முடித்த வதந்தி.!