ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதியில் பெஜலட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றிலும் நான்கு குவாரிகள் செயல்பட்டுவந்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு அதில் ஒரு குவாரி மூடப்பட்டது. இதனால் கற்களைத் தோண்டி எடுக்கப் பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகள், வெடிமருந்துகளை குவாரியிலிருந்த குடோனிலேயே வைத்திருந்தனர்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், பயன்பாடின்றி கிடக்கும் வெடிமருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும் என பர்கூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையறிந்த குவாரி நிர்வாகம் பயன்பாடின்றி கிடந்த ஜெலட்டின் குச்சிகளைக் குழிதோண்டி மூடும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அதற்குள் அங்கு வந்த காவல் துறையினர் ஜெலட்டின் குச்சிகளைப் பறிமுதல்செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து பர்கூர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மான் உள்ளிட்ட வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டதாக 10 பேர் கைது!