ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆறு மற்றும் இதர நீர்நிலைகள் மாசுபடாமல் இருக்க, தமிழ்நாடு அரசும், மாசுக்கட்டுப்பாடு வாரியமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதனடிப்படையில், ஈரோட்டில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகளை பறக்கும் படை அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு வைராபாளையம் பகுதியில் ஏற்கனவே விதிமுறைக்கு மீறி செயல்பட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு தனியார் சலவை தொழிற்சாலை, இரவு நேரத்தில் மாற்று மின் இணைப்பு பயன்படுத்தி இயங்கி வந்தது.
இதனையடுத்து, அங்கு சென்ற மாசுக்கட்டுப்பாடு அலுவலர்கள் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்தனர். அதேபோல், வில்லரசம்பட்டி பகுதியில் திடக்கழிவுகளை இரவு நேரத்தில் லாரியில் எடுத்துச் சென்று கரூரில் கொட்டியதாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், அந்த தொழிற்சாலையையும் நிரந்தரமாக மூடி சீல் வைத்தனர்.