ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய வனக்கோட்டங்களில் 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளன. இதில், சத்தியமங்கலம் புலிகள் காப்பக்தின் கள இயக்குநர் நிகர் ரஞ்சன் வனச்சரகங்களில் வழக்கமான ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில், கள இயக்குநர் நிகர் ரஞ்சன் ஆசனூர் கோட்ட வன ஊழியர்களுடன் ஜீப்பில், ஜூன் 18ஆம் தேதி ஆய்வு செய்தார். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் கள ஆய்வு செய்தபோது எதிரே வந்த யானைகள் வழிமறித்தன.
இதனால் யானைகள் தாக்கக்கூடும் என்பதால் பாதுகாப்பு கருதி துப்பாக்கியை தயாராக வைக்குமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அப்போது அவர்களிடம் துப்பாக்கி இல்லாததால், கோமடைந்த கள இயக்குநர் நிகர் ரஞ்சன் ஆய்வு ரத்து செய்துவிட்டு அங்கிருந்து ஆசனூர் திரும்பினர்.
அதனைத் தொடர்ந்து ஆசனூர் வனத்துறை தங்கும் விடுதியில் வன ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வேட்டைத்தடுப்பு காவலர்களை கள இயக்குநர் தாக்கியதாகவும் அதனை தடுக்க வந்த மாவட்ட வனஅலுவலர், வனச்சரக அலுவலர்களை தள்ளிவிட்டதாகவும் சமூக வலைதளங்கில் வைரலாகியது.
இது குறித்து தமிழ்நாடு அரசு கள இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பவானிசாகர் சட்டப்பேரவை உறுப்பினர் பி.எல்.சுந்தரம் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். புகார் குறித்து சத்திமயங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நிகார் ரஞ்சனிடம் கேட்டபோது ஆசனூரில் கள ஆய்வுக்கு சென்றபோது பாதுகாப்பு விதிமுறைகளி பின்பற்றாமல் பணியில் தொய்வு ஏற்பட்டது.
இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் தாக்கியதாக கூறப்படுவது முற்றிலும் தவறு. பணியாளர்களின் தவறுகளை சுட்டி காட்டும்போது இதுபோன்று தவறான தகவல்கள் பகிரப்படுகிறது என்றார்.
இதையும் படிங்க: அதிமுகவில்தான் குளறுபடி உள்ளது - அமைச்சர் சேகர்பாபு