ETV Bharat / state

தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிக்கு வர்ணம் பூசி அழகுபடுத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் - Tripur pattampoochi amaipu

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் மலை கிராமத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளியின் சுவர்களுக்கு வர்ணம் பூசி, கற்பித்தல் முறை குறித்த ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தினர். அரையாண்டு பள்ளி விடுமுறை காலத்தை பயனுள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் மாற்றினர்.

தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிக்கு வர்ணம் பூசி அழகுபடுத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்  ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி  திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த இணைந்த கைகள்  Tripur pattampoochi amaipu  Sathyamanglam kadambur child labour school
தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிக்கு வர்ணம் பூசி அழகுபடுத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்
author img

By

Published : Jan 2, 2022, 1:44 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள குன்றி மலைப்பகுதியில் மாணவ- மாணவியர் பள்ளி இடைநிற்றலைத் தவிர்க்க மத்திய அரசின் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்புப் பள்ளி பெரிய குன்றி கிராமத்தில் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகிறது.

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தப் பள்ளியில் தற்போது மலைக் கிராமங்களைச் சேர்ந்த 25 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவாக இணைந்து பட்டாம்பூச்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி காலாண்டு, அரையாண்டு, மற்றும் முழு ஆண்டு பள்ளி விடுமுறைக் காலங்களில் கிராமங்களில் உள்ள பள்ளிகளைத் தேர்வு செய்து அந்தப் பள்ளிகளின் சுவர்களை அழகுபடுத்தி ஓவியங்கள் வரைந்து சேவை செய்து வருகின்றனர்.

பட்டாம்பூச்சி அமைப்பு

இந்த அரையாண்டு விடுமுறையில் பட்டாம்பூச்சி அமைப்பைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ரவிச்சந்திரன், பிரபு ஆகியோர் அடங்கிய குழுவினர் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பெரிய குன்றி கிராமத்திற்குச் சென்றனர்.

அங்குள்ள தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளியில் இரண்டு நாட்கள் தங்கி பள்ளியின் சுவர்களுக்கு வர்ணம் பூசி, பல்வேறு வண்ணங்களில் பெயிண்ட் பயன்படுத்தி கேலிச்சித்திரங்கள், வனவிலங்குகள், காய்கறிகள், பழங்கள், ஆங்கில எழுத்துக்கள் போன்ற ஓவியங்களும் அறிவியல் பாடங்களில் இடம் பெற்றுள்ள சதுரம், செவ்வகம், முக்கோணம், உள்ளிட்ட வடிவங்கள் மெய்யெழுத்து, உயிரெழுத்து உள்ளிட்ட தமிழ் எழுத்துக்கள் மற்றும் வாசகங்கள், மற்றும் கணித பாடம் சம்பந்தமான எண்களைப் பள்ளிகளில் வெளிப்புற மற்றும் உட்புற சுவர்கள் அனைத்திலும் அழகுற வரைந்துள்ளனர்.

தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிக்கு வர்ணம் பூசி அழகுபடுத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள்

பள்ளி சுவர்களில் பாடம் குறித்த ஓவியங்கள் மற்றும் தமிழ் ஆங்கில எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால் இங்குப் பயிலும் மலைக் கிராம மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனப் பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பள்ளிகளில் வர்ணம் பூசுவதற்கும், ஓவியங்கள் வரைவதற்கும் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த இணைந்த கைகள் என்ற அமைப்பினர் பல்வேறு வர்ண பெயிண்ட் இலவசமாக வாங்கி தந்து உதவியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பட்டாம்பூச்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி பள்ளி விடுமுறைக் காலங்களில் அரசுப் பள்ளிகளின் சுவர்களை அழகாக்கி கல்வியை மேம்படுத்த உதவி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலைக் கிராமத்தில் உள்ள தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பள்ளியை அழகுபடுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மலைக்கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஒமைக்ரான் பரவல்.. மத்திய அமைச்சருடன் மா. சுப்பிரமணியன் ஆலோசனை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.