தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் சத்தியமங்கலத்தில் இன்று நடைபெற்றது. இதில், மாநில துணை செயலாளர் கப்பராயன் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், திருப்பூர், நீலகிரி மக்களவைத் தொகுதியில் வார்டு வாரியாக நிர்வாகிகள் நியமிப்பது, வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டை தடுப்பது, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் சரிசெய்ய அதிகாரிகளிடம் முறையிடுவது, புதிய வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய வலியுறுத்துவது போன்றவை விவாதிக்கப்பட்டன.
தொடர்ந்து, கடந்த முறை கடம்பூர் மலைப்பகுதியில் பணம் பட்டுவாடா நடந்ததுபோல், இம்முறையும் நடக்காதிருக்கத் தேர்தல் அவசர எண்ணைப் பதிவு செய்து அழைக்க வேண்டும், வார்டு வார்டாக நியமிக்கப்படும் நிர்வாகிகள் பணம் கொடுக்கும் கட்சிகள் மீது புகார் கொடுக்க தயாராக இருக்க வேண்டும், நியாயமான முறையில் வாக்களிக்க வாக்காளர்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், நீலகிரி மக்களவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் ஆதரவு வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.