ETV Bharat / state

வெளியான பவானீஸ்வரர் கோயில் சுவர் இடிந்து விழுந்த காட்சி - பவானீஸ்வரர் கோயில் சுவர் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சி

ஈரோடு: சத்தியமங்கலம் பவானீஸ்வரர் கோயில் தெற்கு பிரகார சுவர் இடிந்து விழுந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

temple wall falls cctv video
compound wall falls cctv video
author img

By

Published : Mar 10, 2020, 11:27 PM IST

Updated : Mar 10, 2020, 11:34 PM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலம் அருகே ஆற்றங்கரையை ஒட்டி, பிரசித்தி பெற்ற பவானீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்கெனவே தெற்குப் பகுதியில் இருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து தற்போது ரூபாய் 40 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கோயிலின் தெற்குப் பிரகார சுவர் முழுவதும் இடிந்து விழுந்து அப்பகுதியில் இருந்த 63 நாயன்மார்கள் சிலைகளும் சேதமடைந்தன.

பவானீஸ்வரர் கோயில் சுவர் இடிந்து விழுந்த காட்சி

இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், தெற்குப் பிரகாரச் சுவர் இடிந்து விழுந்த காட்சி பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: சேவை குறைபாடுடன் செயல்பட்ட வசந்த் & கோ நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அபராதம்

Last Updated : Mar 10, 2020, 11:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.