ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக்கல்லூரி, அமெரிக்க கான்கீரிட் சங்கத்தின் இந்திய பிரிவு ஆகியவை இணைந்து கான்கிரீட்டால் தயாரிக்கப்பட்ட படகைக் கொண்டு, சதுமுகை குளத்தில் படகுப்போட்டியை நடத்தினர்.
தேசிய அளவிலான இப்போட்டியில் ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகம், டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து 19 குழுக்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியானது வருங்காலத்தில் அதிக எடையில்லாத கான்கிரீட் வீடுகள், கடலில் மிதிக்கும் வீடுகள் உருவாக்குதல் மற்றும் நிலநடுக்கத்தை தாங்குவதற்கு ஏற்ற வகையில் கான்கிரீட் வீடுகள் கட்டுதல் குறித்த மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கல்லூரி மாணவர்கள் தயாரித்த கான்கிரீட் படகை நடுவர் குழு ஆய்வு செய்தனர். இப்படகானது மிக உறுதியான இலகுரகத் தன்னமை, அழுத்தம், காற்று மற்றும் சேதம் ஆகியவற்றை சோதித்து பார்க்கப்பட்டது. படகை நீரில் மூழ்கடித்து அது மீண்டும் மிதிக்கும் சோதனையும் நடத்தப்பட்டது.
மாணவர்கள் வடிவமைத்த இப்படகுகள் உறுதித்தன்மை, அழுத்தம், நீர்மூழ்கும் தன்மை, பயணம், தூரம், எடை மற்றும் பயணிக்கும் திறன் ஆகிய காரணிகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டது.
இதில் தேர்வாகும் கல்லூரிகள் அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச கான்கரீட் படகுப்போட்டியில் பங்கேற்பர்கள் என போட்டி நடுவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்புத் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான கடைசி வாய்ப்பு!