சத்தியமங்கலத்தை அடுத்த சிறப்பு இலக்குப்படை முகாமில் உதவி ஆய்வாளராக செல்வன்(39) என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு தேவசிரி என்ற மனைவியும், ஜனனி என்ற ஆறு வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், சத்தியமங்கலத்திலிருந்து பண்ணாரி நோக்கி செல்வன் தனது காரில் தேவசிரி, ஜனனி, உதவியாளர் முருகேசன் ஆகியோருடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, புதுவடவள்ளி என்ற இடத்தில் ஆட்டுக்குட்டி மீது மோதாமல் இருக்க காரை செல்வன் திருப்பியபோது, எதிரே மைசூரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.
இதில், காரில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த முருகேசன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:
மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு, நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் !