ETV Bharat / state

மினி லாரியில் கொண்டுவரப்பட்ட 2.46 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் - Rs 2.46 lakh seized in mini truck in Erode

ஈரோடு: அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி மினி லாரியில் கொண்டுவரப்பட்ட இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 290 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அந்தியூரில் ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்  ஈரோட்டில் மினி லாரியில் கொண்டுவரப்பட்ட ரூ.2.46 லட்சம் பறிமுதல்  ரூ.2.46 லட்சம் பணம் பறிமுதல்  Rs 2.46 lakh seized in Anthiyur  Rs 2.46 lakh seized in mini truck in Erode  Rs 2.46 lakh seized
Rs 2.46 lakh seized in Anthiyur
author img

By

Published : Mar 31, 2021, 7:06 AM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த வெள்ளித்திருப்பூர் பகுதியில் கதிரேசன் தலைமையிலான பறக்கும் படையினர், சித்தோடு காவல் உதவி ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், உரிய ஆவணமின்றி இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 290 ரூபாய் பணம் கொண்டுவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து, காசாளாராகப் பணிபுரியும் ரஞ்சித் (22) என்பவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்தியூரில் மளிகை மொத்த வியாபாரம் செய்து வரும் வேலா ஏஜென்சியைச் சேர்ந்தவர் அவர் என்பதும், மளிகைப் பொருள்களை மினி கண்டெய்னர் லாரியில் ஏற்றிக் கொண்டு கொளுத்தூர் சென்று வியாபாரம் முடித்து விட்டு அவர் வந்ததும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, அந்தியூர் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோவனிடம் ஒப்படைத்தனர். பின்னர் உரிய ஆவணம் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: காரில் கொண்டுசெல்லப்பட்ட 5.66 கோடி ரூபாய் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.