ETV Bharat / state

ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி - சோப்பு கடை உரிமையாளருக்கு வலைவீச்சு - ஈரோடு கிரைம் செய்திகள்

அசோகபுரம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி 10 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

சோப்பு கடை உரிமையாளருக்கு வலைவீச்சு
சோப்பு கடை உரிமையாளருக்கு வலைவீச்சு
author img

By

Published : Oct 28, 2021, 10:36 PM IST

ஈரோடு: அசோகபுரம் பகுதியில் வள்ளல் பாபு என்பவர் 5 ஸ்டார் என்ற பெயரில் சோப்பு கம்பெனி நடத்தி வந்துள்ளார். இவர் அங்குத் தினசரி வசூல் அடிப்படையில் 3 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தியுள்ளார்.

இந்த ஏலச்சீட்டு நிறுவனத்தில் அசோகபுரம், கருங்கல்பாளையம் வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் லட்சக்கணக்கில் பணத்தை கட்ட தொடங்கியுள்ளனர்.

ஆரம்ப கட்டத்தில் முறையாக நடைபெற்ற ஏலச்சீட்டு நாளடைவில் ஏலம் எடுத்த நபர்களுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (அக்.27) வழக்கம் போல் அனைவரிடம் பணம் வசூல் செய்த வள்ளல் பாபு இரவோடு இரவாகத் தலைமறைவாகியுள்ளார். அவர் நடத்திய சோப்பு கம்பனியையும் காலி செய்துள்ளார் .

இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (அக்.28) ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், "ஏலச்சீட்டு நிறுவனத்தில் சுமார் 10 கோடி ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளோம். தலைமறைவாக உள்ள நிறுவனர் வள்ளல் பாபுவை கைது செய்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி வரை மோசடி...பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.