ETV Bharat / state

வாய்க்கால் உடைப்பால் வீணாகும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்கக்கோரி வலியுறுத்தல்! - விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு: கீழ்பவானி பாசன கால்வாயிலிருந்து பிரிந்து செல்லும் கோப்பு வாய்க்காலின் மண் கரை உடைந்து தண்ணீர் வீணாக செல்வதால் இது குறித்து பொதுப்பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வாய்க்கால் உடைந்ததால் வீணாகும் தண்ணீர்
வாய்க்கால் உடைந்ததால் வீணாகும் தண்ணீர்
author img

By

Published : Oct 1, 2020, 1:09 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பாசன கால்வாய், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, காலிங்கராயன் கால்வாய் உள்ளிட்டவைகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுவருகிறது.

கீழ்பவானி பாசன கால்வாயைப் பொறுத்தவரை அந்தக் கால்வாயின் கசிவு நீர் குட்டை, குளம் மூலமாகவும், கீழ்பவானி பாசன கால்வாயிலிருந்து பிரிந்து செல்லும் கோப்பு வாய்க்கால்கள் மூலமாகவும் பாசனத்திற்கான தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவருகின்றன.

இந்நிலையில் ஈரோடு லக்காபுரம் அருகேயுள்ள பெரியார் நகர் கீழ்பவானி பாசன கால்வாய் கோப்பு வாய்க்காலின் மண் கரையில் நேற்று (செப்.30) காலை திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாசனத்திற்காக செல்லும் அனைத்து தண்ணீரும் பாசனத்திற்கு செல்லாமல் சாலையில் வீணாக சென்றுகொண்டிருக்கிறது. அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் உடனடியாக தற்காலிகமாக மண் சுவரை அடைத்து தண்ணீர் விரயத்தைத் தடுத்துள்ள போதும் தொடர்ந்து இதுபோல் கோப்பு வாய்க்கால்களின் மண் கரைகள் பலமற்று இருப்பதால் அடிக்கடி கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் அதிகளவில் வீணாகிறது.

இதனால், பொதுப்பணித் துறையினர் இதுகுறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு, மோசமான நிலையிலுள்ள மண் கரைகளை சீரமைத்து, தண்ணீர் வீணாவதை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: கோவை ராஜவாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பால் வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.