தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ரூ. 1,250 மதிப்பில் நிவாரணப்பொருள்கள்
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கூலித்தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு உதவும வகையில் சத்தியமங்கலம் ரீடு நிறுவனம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இணைந்து நிவாரணப்பொருள்களை வழங்கி வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் இன்று (ஜூன் 4) தோப்பூர் காலனி, பத்ரகாளியம்மன் கோயில் ஆகிய பகுதியில் சுமார் 500 பேருக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட ரூ. 1,250 மதிப்பிலான பொருகள்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மலைக்கிராமங்ளிலும் நிவாரணப்பொருள்கள் வழங்கப்படும் என ரீடு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.