ETV Bharat / state

காணாமல்போனவரை மீட்டுத்தரக் கோரி தேர்தலைப் புறக்கணித்த உறவினர்கள்!

ஈரோடு: காணாமல்போனவரை மீட்டுத்தரக் கோரி உறவினர்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

Relatives  boycotted election for demand return of missing man
Relatives boycotted election for demand return of missing man
author img

By

Published : Dec 27, 2019, 9:53 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவேங்கிடம் பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி, பெருந்துறையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடந்த பல ஆண்டுகளாக மேற்பார்வையாளராகப் பணிபுரிந்துவந்தார்.

இதில் கடந்த ஐந்தாம் தேதி நிறுவனத்திற்கு பணிக்குச் சென்ற துரைசாமி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது உறவினர்கள் தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து துரைசாமியின் தந்தை வீரப்பன், காணாமல்போன மகனை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்தப் புகார் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவரது நிலை குறித்து தெரிவிக்காமல், அவரது இருசக்கர வாகனத்தை மட்டும் மேட்டுக்கடை வாய்க்கால்மேடு பகுதியில் இருந்ததாகக் கூறி காவல் துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சுப்புராஜ், துரைசாமி குடும்பத்தினரின் வழக்குரைஞர்

இந்நிலையில் இது குறித்து இன்று அவரது குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்து வாக்களர் அட்டையை கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். இதில் மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணி காரணமாக ஆய்வுப் பணிக்குச் சென்றுவிட்டதால், வாக்காளர் அடையாள அட்டைகளைத் திருப்பி ஒப்படைக்காமல் காணாமல்போன தங்களது மகனைக் கண்டுபிடித்து தரக்கேட்டும், உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகப் புகார் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க...விதை விருட்சமாய் மாறி சமூகத்திற்கு பயன்படட்டும் - அசோக்குமாரின் பயணம் தொடரட்டும்

Intro:ஈரோடு ஆனந்த்
டிச27

காணாமல் போனவரை மீட்டுத் தர கோரி தேர்தலை புறக்கணித்த உறவினர்கள்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் நிறுவனமொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த இளைஞர் கடந்த 22 நாட்களாக காணாமல் போனது குறித்து நிர்வாகமும், பெருந்துறை காவல்துறையும் எவ்வித நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்து இளைஞரின் குடும்பத்தினர் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள திருவேங்கிடம் பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் பெருந்துறையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் கடந்த பல ஆண்டுகளாக மேற்பார்வையாளராகப் பணி புரிந்து வந்துள்ளார்.

இவர் கடந்த 5ம் தேதி நிறுவனத்திற்கு பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தனியார் நிறுவனத்திடம் கேட்டு முறையான பதில் கிடைக்காததால் அதிர்ச்சியைடைந்த குடும்பத்தினர் பெருந்துறை காவல்நிலையத்தில் காணாமல் போன துரைசாமியை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அவரது தந்தை வீரப்பன் புகார் கொடுத்தார்.

புகார் கொடுத்து பல நாட்கள் கடந்த பின்னரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அவரது நிலை குறித்து தெரிவிக்காமல் அவரது இரண்டு சக்கர வாகனத்தை மட்டும் மேட்டுக்கடை வாய்க்கால்மேடு பகுதியில் இருந்ததாகக் கூறி காவல்துறையினர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

துரைசாமி மாயமாகி 22 நாட்கள் கடந்த பின்னரும் பணிக்கு வந்த அவரது நிலை குறித்து கூறாத நிர்வாகத்தைக் கண்டித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பெருந்துறை காவல்துறையினரைக் கண்டித்தும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்து அவரது குடும்பத்தினர் தங்களது வாக்காளர் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் கைகளில் காணாமல் போன துரைசாமியின் புகைப்படத்துடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

Body:ஆனால் மாவட்ட ஆட்சியர் தேர்தல் பணி காரணமாக ஆய்வுப் பணிக்கு சென்று விட்டதால் வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி ஒப்படைக்காமல் காணாமல் போன தங்களது மகனைக் கண்டுபிடித்து தர கேட்டும், உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகப் புகார் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.

Conclusion:பேட்டி : வனிதா – துரைசமியின் மனைவி
சுப்புராஜ், திருப்பூர் – துரைசாமி குடும்பத்தினரின் வழக்கறிஞர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.