ETV Bharat / state

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை: இலவச வீட்டுமனை பட்டாவுடன் புதுக்கரைபுதூர் மக்கள் தர்ணா போராட்டம் - 97 நபர்களின் இலவச வீட்டு பட்டாக்கள் தகுதியில்லை

ஈரோடு: தங்களுக்கு வழங்கிய இலவச வீட்டுமனை பட்டாக்களை தகுதியில்லாத நபருக்கு வழங்கியதைக் கண்டித்து புதுக்கரைபுதூர் கிராம மக்கள் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

erode
erode
author img

By

Published : Dec 18, 2020, 9:27 PM IST

ஈரோடு மாவட்டம் புதுக்கரைபுதூர் கிராமத்தில் வசித்து வந்த 197 நபர்களுக்கு 1993 – 1995 ஆம் ஆண்டுகளில் அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது அங்கு வசித்து வரும் 97 நபர்களின் இலவச வீட்டு பட்டாக்கள் தகுதியில்லை எனக் கூறு தகுதியில்லாத வேறு நபருக்கு மாற்றியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசியல் பின்புலம்

இலவச வீட்டுமனை பட்டாவுடன் புதுக்கரைபுதூர் மக்கள் தர்ணா போராட்டம்

அரசியல் தூண்டுதலால் வசதி படைத்த நபருக்கு இலவச வீட்டு மனை பட்டா வசதி வழங்கப்பட்டுள்ளது என புதுக்கரைபுதூர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். சிலரது சுய லாபத்திற்காக தங்களுக்கு தெரியாமலேயே அரசியல் பின்புலத்துடன் இலவச மனை பட்டாவை மாற்றியுள்ளதாகக் கூறினர். அங்கு வசித்து வரும் நபர்களிடம் தகுதியில்லாத சில நபர்கள் அந்த இடத்திற்கு உரிமை கொண்டாடி வருவதால், குழப்பங்களும் மோதல் போக்கு உருவாகியுள்ளது.

கண்ணீர் வடிக்கும் மக்கள்

நாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு காலி செய்ய சொன்னால் எங்கே செல்வோம். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். அரசு ஒதுக்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாக்களை எங்களுக்கே வழங்க வேண்டும் என்பதே அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

இந்நிலையில், புதுக்கரைபுதூர் கிராம மக்கள், வேறு நபர்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை ரத்து செய்யவும், இலவச பட்டாமனையை எங்களுக்கே வழங்க வேண்டும் என கோரி கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர். அப்போது அங்கிருந்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் அம்மக்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

சமரச பேச்சுவார்த்தை

இதனால், மனு கொடுக்க சென்ற மக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டம் செய்த மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வட்டாட்சியர் தியாகராஜு மற்றும் நில வருவாய் ஆய்வாயர் ரஜிக்குமார் ஆகியோரை அழைத்து பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்.

வட்டாட்சியர் குழு அமைத்து வீடில்லா ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த பின்னரே அம்மக்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகளையும் பருவத்தேர்வுகளையும் ஒன்றாக நடத்த முடிவு - அம்பேத்கர் பல்கலை. பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.