ஈரோடு: மாக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கடம்பூரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
மாக்கம்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில் உயர் மட்ட பாலம் கட்டக் கோரி மாக்கம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கடம்பூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட ஊராக வளர்ச்சி துணை இயக்குநர் உமாசங்கர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: 'மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்' - மனித உரிமை ஆணையம்