ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, நாளொன்றுக்கு 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தற்போது இம்மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, மாநகராட்சி நகர்ப்புற மருத்துவமனை, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போன்ற இடங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. குறைவான தடுப்பூசி மையங்களே அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு மக்கள் தகுந்த இடைவெளியின்றி கூடும் சூழல் உருவாகியுள்ளது.
இது தொடர்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்த சிலரிடம் கேட்ட போது, ’ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும். பகுதி வாரியாக பொதுவான வாகனத்தைப் பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்து தரவேண்டும். இதனைச் செயல்படுத்தினால் ஊரடங்கில் தடுப்பூசி மையங்களை தேடி திரியும் நிலை தவிர்க்கப்படும்’ என்றனர்.
இதையும் படிங்க: இறந்தவரின் பரிந்துரைச் சீட்டைப் பயன்படுத்தி ரெம்டெசிவிர் வாங்க முயற்சி - 3 பேர் கைது