ETV Bharat / state

சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல் - பொதுமக்கள் புகார்

author img

By

Published : Mar 20, 2020, 11:34 PM IST

ஈரோடு: சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்
சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கம்பத்துராயன் புதூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை, மஞ்சள், மரவள்ளி உள்ளிட்ட சாகுபடிகள் செய்யப்படுகிறன.

இங்குள்ள விவசாயிகள் இயற்கை உரத்திற்காக அப்பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களில் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் விவசாயிகள் வண்டல் மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் அதே பகுதியில் உள்ள குட்டையில் சிலர் 50க்கும் மேற்பட்ட லாரிகளில் சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளுவதாக மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்தல்

விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதி அளிக்காத நிலையில், சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கொள்ளை குறித்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் கணேஷிடம் கேட்டபோது, "இதுகுறித்து புகார் எதுவும் வரவில்லை. புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: மணல் கொள்ளையில் ஈடுபட்ட வண்டிகள் பறிமுதல்: வருவாய் அலுவலர்கள் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.