ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் பாலை தரையில் ஊற்றி போராட்டம்! - Erode News in Tamil

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, ஈரோட்டில் பால் உற்பத்தியாளர்கள் பாலை தரையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 17, 2023, 12:49 PM IST

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் பாலைக் ஊற்றி போராட்டம்

ஈரோடு: தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் நேற்றைய தினம் சென்னை தலைமை செயலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யப் போவதில்லை என்று அறிவித்திருத்தனர். இந்நிலையில் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்தபடி, இன்று (மார்ச்.16) முதல் தமிழ்நாடு அரசின் ஆவின் (Aavin) நிர்வாகத்திற்கு பால் வழங்காமல் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், இன்று காலை ஈரோடு அருகே நசியனூர் பகுதியில் தங்களின் கறவை மாடுகளுடன் சாலையில் திரண்ட பால் உற்பத்தியாளர்கள் பாலை சாலையில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும், தமிழ்நாடு முழுவதும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகம் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

  • ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 42 ரூபாயாக உயர்த்த வேண்டும்
  • எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு 44 ரூபாயில் இருந்து 51 ரூபாய் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்
  • ஆவினுக்கு பால் வழங்கும் கறவையினங்களுக்கு ஆவின் செலவில் 'இலவச காப்பீடு வசதி' செய்து தரவேண்டும்
  • கிராம சங்கங்களில் பால் கொள்முதலில் ஐஎஸ்ஐ பார்முலாவை பின்பற்ற வேண்டும்
  • கால்நடை தீவனம் 50 சதவீதம் மானியத்தில் வழங்க வேண்டும்
  • சங்கத்தில் பரிசோதனை செய்யபட்ட பாலின் தரம் அளவு அடிப்படையில் ஒப்புகை சீட்டு வழங்கி காலதாமதம் இன்றி பாலுக்கான பணம் படுவாட செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை விடுத்தனர்.

பால் வளத்துறை அமைச்சர் நாசர் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று முதல் பால் உற்பத்தியாளர்கள் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்குவதை நிறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஓரு பகுதியாக நசியனூர் பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் முன்பு, பால் உற்பத்தியாளர்கள் மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் தலைமையில் விவசாயிகள் கறவை மாடுகளுடன் பாலை தரையில் கொட்டி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல, ஈரோடு மாவட்டம் ராயபளையத்திலும், மதுரை மாவட்டம் உசிலம்படியிலும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தக் கோரி போரட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக பால் கொள்முதல் செய்ய வரும் வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிய பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களின் இருப்பு ஓரு சில நாட்கள் மட்டுமே வரும் என்பதால் இந்த போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: நாளை முதல் கிராமங்களில் பால் கொள்முதல் நிறுத்தம்... ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.