ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜேம்ஸ்ராபர்ட். நேற்றிரவு ஜேம்ஸ்ராபர்ட்டும், அவரது சக காவல் நண்பர் கார்த்திகேயனும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சிறுவலூர் காவல் நிலையம் செல்லும் வழியில் கார் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில், காரை ஓட்டி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஜேம்ஸ்ராபர்ட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவரது நண்பர் கார்த்திகேயன் படுகாயமடைந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துவிட்டு, கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவலறிந்த காவல் துறையினர் சம்பவம் இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவலர் இரவு ரோந்துப் பணியில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.