ETV Bharat / state

கடனை திருப்பி தராத ஊழியர் - ஜாமீன் கையெழுத்து போட்டவருக்கு அடி - கடனை திருப்பி தராதா உழியருக்கு அடி

ஈரோட்டில் மற்றொருவருக்காக ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கிய ஊழியர் பணத்தை திருப்பி தராத நிலையில் பணம் கொடுத்தவர்கள் அவ்ரை சரமாரியாக தாக்கிய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜாமீன் கையெழுத்து போட்டவருக்கு அடி
ஜாமீன் கையெழுத்து போட்டவருக்கு அடி
author img

By

Published : May 14, 2022, 8:02 PM IST

ஈரோடு: கொடுமுடி அருகேவுள்ள சாலை புதூரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது மனைவி மாரியம்மாள் என்பவருடன் வசித்து வருகிறார். சண்முகம் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருக்கும் மாணிக்கம் என்பவருக்கு கடனாக கொடுமுடி பெரிய வட்டத்தைச் சேர்ந்த தருமன் என்பவர் தாயாரிடம் கடனாக வாங்கி கொடுத்துள்ளார்.

அதற்கு அவர் ஜாமீன் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளார். இந்நிலையில் மாணிக்கம் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால், பணம் கொடுத்த பிரவீன், தருமன் ஆகியோர் சண்முகத்தை சராமாரியாக தாக்கினர்.

இதில், அவர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொடுமுடி காவல் துறையினர், சண்முகத்தை தாக்கிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளையடிக்க சென்ற வீட்டில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.