ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் அருகே தெங்குமரஹாடா, கல்லாம்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமத்தை சுற்றிலும் மாயாறு ஓடுகிறது. இங்கு பாதை இல்லாததால் அன்றாட தேவைகளுக்கு பொதுமக்கள் மாயாற்றை கடந்து சென்று வருகின்றனர். தற்போது நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருதால் கூடலூரில் இருந்து வெள்ளநீர் மாயாற்று வழியாக பவானிசாகர் அணைக்கு செல்கிறது.
இந்நிலையில் கல்லாம்பாளையத்தில் வசிக்கும் ராமி (65) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். இறந்த பெண்ணின் உடல் சொந்த ஊரான கோத்திகிரிக்கு எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், இறந்த பெண்ணின் உடலை மாயாற்றை கடந்து உறவினர்கள் ஆபத்தான நிலையில் தூக்கிச் சென்றனர்.
பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸில் உடலை ஏற்றி கோத்தகிரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தற்போது வனத்துறை அமைச்சராக உள்ள ராமசந்திரனின் சொந்த தொகுதியில் நடந்துள்ளது.
இந்நிலையில் மாயாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் அவலம்: சுடுகாட்டிற்கு சாலைகோரும் கிராம மக்கள்!