சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் உட்கோட்டத்தில் சிறுத்தை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடர்ந்த காட்டுப்பகுதியில் திரிந்த சிறுத்தைகள் தற்போது மக்கள் நடமாடும் பகுதியில் திரிவதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ஆசனூர் அடுத்துள்ள காரப்பள்ளம் வன சோதனைச்சாவடி அருகே சாலையோர மரத்தில் ஒரு சிறுத்தை ஹாயாக அமர்ந்திருந்தது. இதைக் கண்ட வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் சிறுத்தை மரத்தில் அமர்ந்திருந்த காட்சியை படம் பிடித்தார். சிறிது நேரம் அமர்ந்திருந்த சிறுத்தை வாகனத்தை கண்டவுடன் கீழே குதித்து வனப்பகுதிக்குள் ஓடிச் சென்று மறைந்தது.
![ஆசனூர் மைசூர் சாலையில் மரத்தில் இருந்து இறங்கிய சிறுத்தை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-01c-sathy-leopard-photo-tn100009_21102020093735_2110f_1603253255_315.jpg)
சிறுத்தை மரத்தின் மீது அமர்ந்திருந்த காட்சியை கண்ட வாகன ஓட்டி அதிர்ச்சி அடைந்ததோடு தனது செல்போனில் எடுத்த புகைப்படங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க...அயர்லாந்திலிருந்து பார்த்த மூன்றாம் கண்: மதுரவாயலில் மாட்டிக்கொண்ட 'சைக்கோ முரளி'