ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், ஈரோடு மாவட்ட்த்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கிறது.
ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் அரசு சார்பில், ஈரோட்டிலும் ரெம்டெசிவிர் மருந்து தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.