ஈரோடு: ஒவ்வொரு ஆண்டும் ஆடி பதினெட்டாம் பெருக்கன்று மட்டும், பவானி சாகர் அணையின் மேல் பகுதியை பார்வையிட பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல் அணையின் முன்பகுதியில் உள்ள பூங்காவுக்கு, தினந்தோறும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாளை (ஆக. 3) ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று பவானி சாகர் அணையை பார்வையிட அனுமதி மறுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து அணையின் முன்பகுதியில் உள்ள மீன் விற்பனைக் கடைகள் செயல்படவும், பேரூராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதேபோன்று பண்ணாரிஅம்மன் கோயில் சாமி தரிசனத்துக்கும் நாளை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண் காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு தொடக்கம்