ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்த வருகிறது. இந்நிலையில், நேற்றை (ஜூன்.19) நிலவரப்படி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933ஆக உள்ளது. பிற மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை 500க்கு கீழ் சரிந்து, ஒரு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
தொற்று குறையாமல் உள்ளதால் அச்சத்தின் காரணமாக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாலையிலிருந்து ஆர்வத்துடன் வரிசையில் காத்திருக்கின்றனர். தினந்தோறும், 13,500 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கிடையே, இன்று (ஜூன்.20) தடுப்பூசி இல்லாத நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மக்கள் அதிகளவில் காத்திருந்தனர்.
மேலும், சத்தியமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய தடுப்பூசி மையத்தின் முன்பு இன்று தடுப்பூசி இல்லை என சுகாதாரத் துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும, மக்கள் தடுப்பூசி கிடைக்கும் என நம்பிக்கையுடன் மையத்தின் முன் சுமார் நான்கு மணி நேரமாக காத்திருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் மீது வழக்குப்பதிவு