ETV Bharat / state

கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தையால் ஈரோடு மாவட்ட கிராம மக்கள் பீதி

author img

By

Published : Feb 2, 2022, 10:09 PM IST

நஞ்சை புளியம்பட்டியில் நள்ளிரவில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் இரண்டு இடங்களில் கேமராக்களைப் பொருத்தி, கண்காணித்து வருகின்றனர்.

கிராமத்திற்கு புகுந்த சிறுத்தை
கிராமத்திற்கு புகுந்த சிறுத்தை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள நஞ்சைபுளியம்பட்டியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சரவணன் என்பவருக்குச் சொந்தமான நான்கு ஆடுகள், ஒரு சேவலை சிறுத்தை வேட்டையாடியது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த டி.என்.பாளையம் வனத்துறையினர், சிறுத்தை வந்த பாதைகளை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், அன்று நள்ளிரவே அப்பகுதியில் நாய்கள் குரைத்தால் அப்பகுதி மக்கள் வெளியில் வந்து பார்த்துள்ளனர். அப்போது, சிறுத்தையைக் கண்ட மக்கள் உடனடியாக டி.என்.பாளையம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற வன அலுவலர்கள், காலடி தடங்களை ஆராய்ந்த நிலையில், இரண்டு இடங்களில் கேமராக்களைப் பொருத்தியுள்ளனர்.

அண்மையில் சமவெளிப் பகுதியான திருப்பூர் மாவட்டத்திற்கு வந்த சிறுத்தையால் விவசாயிகள் காயமடைந்தனர்.

கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை

அதேபோல சமவெளிப் பகுதியான நஞ்சைபுளியம்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பெரும் பீதியிலுள்ளனர்.

மக்களும் வீடுகளைவிட்டு வெளியேறாமல் இருந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சரக்கு வண்டியில் மோதிய இளைஞரை இழுத்துச் சென்ற வாகனம் - அதிரவைக்கும் சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.