ஈரோடு புறநகர் மாவட்ட அதிமுக செயலாரும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கே.சி. கருப்பணன், அக்கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தல் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், பவானி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக வார்டு, கிளைச் செயலாளர்கள், கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ”மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்று பல்வேறு இடையூறுகளை செய்துவந்தாலும், நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீரும்; அதில் எந்தவித மாற்றமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை ரஜினியும் கமலும் புறக்கணிக்கவில்லை. மாறாக மக்கள்தாம் அவர்களிருவரையும் புறக்கணித்துள்ளார்கள்.
ரஜினி தனது படம் திரைக்கு வரும்போது அரசியல் கருத்துகளைப் பேசுவதும், படம் நன்றாக ஓடிய பின்பு அரசியல் பற்றிய கருத்துகளைத் தவிர்ப்பதும் கடந்த 15 ஆண்டுகளாக அரங்கேறிவருகிறது. கமலும் அரசியல் கட்சியைத் தொடங்கி வேலைக்காகவில்லை என்று தெரிந்தவுடன் புறக்கணிக்கிறார்” என்றார்.
இதையும் படிங்க: ’மக்களின் பலத்தால் தமிழ்நாட்டின் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்’